பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நினைவுகூர்ந்து பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 12:30PM by PIB Chennai

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த கட்டுரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். கல்வியாளர், துணைவேந்தர், அமைச்சர், அரசியல் தலைவர் என அவரது பன்முகப் பங்களிப்புகளை அதில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவின் ஒற்றுமையையும், தேச ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதில் டாக்டர் முகர்ஜியின் இணையற்ற முயற்சிகளை திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

2019-ல் பிரிவுகள் 370, 35(ஏ) ஆகியவற்றை ரத்து செய்தது, தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் டாக்டர் முகர்ஜியின் வாழ்நாள் அர்ப்பணிப்புக்கு செய்யப்பட்ட பொருத்தமான மரியாதையாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

துணைவேந்தர், அமைச்சர், அரசியல் தலைவர் மற்றும் பலவாக டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பலதுறை சாதனைகளை எடுத்துரைத்து அவர் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளேன். இந்தியாவின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் அவரது இணையற்ற முயற்சிகளை எடுத்துரைத்துள்ளேன். 2019-ல் பிரிவுகள் 370, 35(ஏ) ஆகியவற்றை ரத்து செய்தது அவரது முயற்சிகளுக்கு பொருத்தமான மரியாதையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281493&reg=3&lang=1

***

SS/SMB/LDN/RJ


(रिलीज़ आईडी: 2281624) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam