ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமையில் கங்கை நதி புனரமைப்பு குறித்த பணிக்குழுவின் 19-வது கூட்டம்

प्रविष्टि तिथि: 02 JUL 2026 7:38PM by PIB Chennai

கங்கை நதி புனரமைப்பு தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் 19-வது கூட்டம், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமையில் 2026 ஜூலை 2 அன்று நடைபெற்றது. இதில், 'நமாமி கங்கை' திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, அறிவியல் பூர்வமான நீர் மேலாண்மை, கொள்கை சீர்திருத்தங்கள், பங்குதாரர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நதி புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரியும், பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகளைச் சேர்ந்த முக்கியப் பங்குதாரர்களும் பங்கேற்றனர். மத்திய அரசின் மின்சார, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், உள்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்துவதே  கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அனல் மின்சாரம், ரயில்வே, நகர்ப்புற நில வடிவமைப்பு, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் ஆக்ரா, பிரயாக்ராஜ், வாரணாசிக்கான நகர அளவிலான மறுபயன்பாட்டு செயல் திட்டங்கள்  நிறைவடைந்ததை அமைச்சர் ஆய்வு செய்தார். தரம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மறுபயன்பாடு வழிநடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திரு சி ஆர் பாட்டீல், பொது சுகாதாரம் மற்றும் விவசாய உற்பத்தித்திறனைப் பாதுகாப்பதற்காக, நீர்ப்பாசனம், பிற பயன்பாடுகளுக்காக உத்தேசிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்குக் கண்டிப்பாக இணங்க வேண்டும் என்றும், வழக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், தரத்தின் உறுதி, நிலையான நகர்ப்புற நீர் மேலாண்மைக்கான நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், அடையாளம் காணப்பட்ட மறுபயன்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாநிலத் துறைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280512&reg=3&lang=1   

---- 

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2281514) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati