நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் பாதுகாப்புக்கான ஐநா அமர்வுக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளது
प्रविष्टि तिथि:
05 JUL 2026 1:30PM by PIB Chennai
ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பான யுஎன்சிடிஏடி (UNCTAD) ஏற்பாடு செய்துள்ள, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான அரசுகளுக்கிடையேயான நிபுணர் குழுவின் ஒன்பதாவது அமர்வுக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. இந்த அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நாளை முதல் 3 நாட்கள் (2026 ஜூலை 06 முதல் 08 வரை) நடைபெறும். இந்த அமர்வு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், அதில் உள்ள சிக்கல்கள், கொள்கையில் உருவாகி வரும் சிக்கல்கள், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்கள், கல்வித்துறையினர் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்கும்.
ஐநா-வின் நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் கீழ் அமைக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான இந்த நிபுணர் குழு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கொள்கை தொடர்பான ஒத்துழைப்புக்கும் உரையாடலுக்குமான முதன்மையான அரசுகளுக்கிடையேயான தளமாகும்.
நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச விவாதங்களில் இந்தியா தீவிரமாகப் பங்களித்து வருகிறது. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஒன்பதாவது ஐநா நுகர்வோர் பாதுகாப்பு மாநாட்டின் போது, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, இந்தியாவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது.
ஒன்பதாவது அமர்வில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் திருமதி நிதி கரே, இந்திய அரசின் சார்பில் கலந்துகொள்வார். மூன்று நாள் கலந்தாய்வுகளுக்கு அவர் தலைமை வகிப்பதோடு், உலகளாவிய நுகர்வோர் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து உறுப்பு நாடுகளிடையே நடைபெறும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281247®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281331)
आगंतुक पटल : 13