PIB Backgrounder
azadi ka amrit mahotsav

கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கான ஒரு டிஜிட்டல் கட்டமைப்பு

प्रविष्टि तिथि: 04 JUL 2026 9:23AM by PIB Chennai

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், டிஜிட்டல் நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 

மக்களுக்கான டிஜிட்டல் இணையதள சேவை என்பது சுயஉதவிக் குழுக்கள், அது சார்ந்த கூட்டமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் இணையதள, மொபைல் தளமாகும். இத்திட்டம், ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு சுய வேலைவாய்ப்பு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள், நீடித்த வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் முதன்மையான வறுமை ஒழிப்புத் திட்டமாகும்.

இந்த டிஜிட்டல் தளத்தில், உறுப்பினர் பதிவுகள், சுயவிவரங்கள், சேமிப்புகள், கடன் வழங்குதல், திருப்பிச் செலுத்துதல், நிதிப் பரிவர்த்தனைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், சுயஉதவிக் குழுக்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகளை நிர்வகிப்பதற்கான ஒரு விரிவான டிஜிட்டல் தீர்வை வழங்குகிறது. இந்தத் தளம் நிர்வாக நடைமுறைகளையும், நிதி நிர்வாகத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது.

டிஜிட்டல் பதிவுகள் மூலம், கையேட்டுப் பதிவுமுறை பராமரிப்பைக் குறைத்தல்,

சுய உதவிக் குழுக்களுக்கான நிகழ்நேரப் பரிவர்த்தனைக் கண்காணிப்பைச் செயல்படுத்துதல்,

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல்,

சுய உதவிக் குழு கட்டமைப்பிற்குள் ஆண்டொன்றுக்கு ரூ 2 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தல்.

மக்களுக்கான இயங்குதளம், மொபைல் செயலிகள் என இரண்டு வசதிகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்துவ பயனர் குழுக்கள் மற்றும் செயல்பாடுகளுக்குச் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இயங்குதளம் சுய உதவிக் குழுக்கள், கிராம அமைப்புகள், தொகுப்பு நிலை கூட்டமைப்புகள், அவற்றின் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும் நிர்வாகிகள், மின்-கணக்காளர்கள், பரிவர்த்தனை அங்கீகரிப்பாளர்களுக்கு உதவுகிறது.

மொபைல் செயலி, களத்தில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகளின் செயல்பாடுகளைத் திறமையாகப் பதிவு செய்யவும் நிர்வகிக்கவும் உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280986&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2281002) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , हिन्दी