ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7-வது தேசிய நீர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 JUL 2026 4:43PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர் வளங்கள், நதி மேம்பாடு, கங்கை நதி புனரமைப்புத் துறை, தேசிய விருதுகள் இணையதளத்தில் 7-வது தேசிய நீர் விருதுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பங்களும் இந்த இணையதளம் (www.awards.gov.in) மூலமாக மட்டுமே பெறப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள நிறுவனங்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களுக்கு இந்த தேசிய விருதுகள் இணையதளம் அல்லது துறையின் இணையதளம் (www.jalshakti-dowr.gov.in) ஆகியவற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 28 ஆகஸ்ட் 2026 ஆகும்.

 

விருதுகளுக்கான தகுதி:

நீர் பாதுகாப்பு, மேலாண்மைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மாநிலங்கள், மாவட்டங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அணை நிர்வாக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை இவ்விருது பெறுவதற்கான  தகுதியுடையவையாகும்.

 

கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்:

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

தேர்வு நடைமுறை:

7-வது தேசிய நீர் விருதுகளுக்காகப் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், பரிசீலனைக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டுப் பட்டியலிடப்படும். பின்னர், இப்பட்டியலில் உள்ள விண்ணப்பங்கள், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையால் அமைக்கப்பட்ட நடுவர் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகள் ஒப்புதலுக்காக மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். மேலும், விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் குடியரசுத் தலைவர் அல்லது குடியரசு துணைத் தலைவர் மூலம் விருதுகள் வழங்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280757&reg=3&lang=1

(Release ID: 2280757)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2280844) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam