ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் துவக்கம்

प्रविष्टि तिथि: 02 JUL 2026 6:53PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள முக்காவரிப்பள்ளி கிராமத்தில், வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் இன்று நாடு தழுவிய அளவில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண், மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி மற்றும் திரு கமலேஷ் பாஸ்வான், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு. சிவராஜ் சிங் சவுகான்,  பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய உத்தியின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம், தொழிலாளர்களுக்கு முழுமையாக 125 நாட்கள் வேலைக்கான உறுதியான உத்தரவாதத்தை அளிக்கிறது என்று கூறினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் இப்போது மேம்படுத்தப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

 

இந்தத் திட்டத்தின் முதல் ஆண்டிலேயே மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 95,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும், மாநிலங்களின் 40 சதவீதப் பங்களிப்பையும் சேர்த்தால் ஆண்டுச் செலவு சுமார் ரூ. 1.51 லட்சம் கோடியை எட்டும் என்றும் திரு சவுகான் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 7.5 லட்சம் கோடி செலவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் தொகை, நாட்டின் 2.86 லட்சம் பஞ்சாயத்துகளுக்குச் சென்றடையும். இதன் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 2 கோடிக்கும் அதிகமான நிதி கிடைக்கும். இது கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன்,  நிரந்தரச் சொத்துக்களையும் உருவாக்கும்.

 

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஏற்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த திரு சிவராஜ் சிங் சவுகான், தாமும் தினமும் மரக்கன்று நடுவதாகக் கூறியதுடன், பொதுமக்கள் தங்கள் பிறந்தநாளன்று குறைந்தது ஒரு மரக்கன்றாவது நட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வளர்ச்சியடைந்த கிராமங்கள், வளர்ச்சியடைந்த ஆந்திரப் பிரதேசம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா ஆகியவற்றை உருவாக்குவதற்கான உறுதிமொழியையும் அவர் செய்து வைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280463&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2280571) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia , Kannada