மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரிய வசதி: டிஜிட்டல் தளங்கள் மாற்றத்தை எளிதாக்குகின்றன
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:05PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா திட்டம் 2026 ஜூலை 1 அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஆளுகையை மேலும் வெளிப்படையானதாகவும், அணுகக்கூடியதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்காக இந்தியா டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 2015-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, டிஜிட்டல் இந்தியா திட்டமானது, கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பொதுச் சேவை வழங்கலை மாற்றியமைத்துள்ளது.
கல்வித் துறையில், 2020-ம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கைக்கு இணங்க, பாதுகாப்பான டிஜிட்டல் சான்றிதழ்களை ஊக்குவிக்கும் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் இந்தியா ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக ஏபிசி, என்ஏடி ஆகிய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தரவுகளின்படி, 2,963 உயர்கல்வி நிறுவனங்கள் ஏபிசி (ABC) தளத்தில் பதிவு செய்துள்ளன. 110.65 கோடிக்கும் அதிகமான கல்விப் பதிவுகள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் டிஜிட்டல் கல்விச் சூழல் அமைப்பின் பயன்பாடு அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
ஏபிசி தளம், காகித ஆவணங்களுக்குப் பதிலாகப் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கல்வி நிர்வாகத்தை எளிதாக்குகிறது. இது சேர்க்கைகள், கல்வி உதவித்தொகைகள், உள்ளகப் பயிற்சிகள், வேலைவாய்ப்புகளுக்கான கல்விச் சான்றுகளை விரைவாகச் சரிபார்ப்பதை இது எளிதாக்குவதோடு, காகிதப் பணிகளைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280431®=3&lang=1
(Release ID : 2280431)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280560)
आगंतुक पटल : 12