பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு நிர்வாகத்தில் மனித நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவை வழி நடத்த வேண்டும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 02 JUL 2026 5:54PM by PIB Chennai

மனித ஞானம், அறநெறி, பொறுப்புணர்வு ஆகியவற்றால் தொழில்நுட்பம் வழிநடத்தப்படும் ஒரு நிர்வாக ஆளுகை மாதிரி தேவை என மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுக்குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மனிதனால் வழிநடத்தப்படும் செயற்கை நுண்ணறிவே, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய சக்தியாக விளங்கும் என்று அவர் கூறினார்.

 

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 29-வது தேசிய மின்-ஆளுகை மாநாட்டின் விருது வழங்கும் அமர்வில் உரையாற்றிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு விருப்பத் தேர்வாக இருந்த நிலை மாறி, ஆளுகையின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது என்றார். செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

 

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் என்பது, மனிதர்களின் முடிவெடுக்கும் திறனை இயந்திரங்களால் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதல்ல என்று அவர் தெரிவித்தார்.  மாறாக, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, செயல்திறன், சேவை வழங்கல் ஆகியவற்றை தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவதே ஆகும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

செயற்கை நுண்ணறிவு சார்ந்த, தரவு அடிப்படையிலான, பாதுகாப்பான டிஜிட்டல் ஆளுகை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் இந்தியாவின் டிஜிட்டல் ஆளுகைப் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், புதுமைப் படைப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280427&reg=3&lang=1

(Release ID : 2280427)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2280541) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati