சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார வாகனப் போக்குவரத்து தொடர்பான தேசிய மாநாடு - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 02 JUL 2026 1:12PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், புதுதில்லியில் நடைபெற்ற 'மின்சார வாகனப் போக்குவரத்து: வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக மின்சார வாகனப் போக்குவரத்து மையமாக உருவாக்குதல்' என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டிற்குத் தலைமை விருந்தினராகத் தலைமை வகித்தார். இந்தியாவின் மின்சார வாகனப் போக்குவரத்து மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி மையமாக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்குமான செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடைபெற்றது. இதில், மூத்த கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், வாகன உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், இந்தியாவின் மின்சார வாகனப் பயன்பாட்டு மாற்றம் என்பது ஒரு தொழில்நுட்பத்திற்குப் பதிலாக மற்றொரு தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது மட்டுமல்ல என்றார். அது உற்பத்தியை வலுப்படுத்தி, பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையான தொழில்துறை சூழலமைப்பைக் கட்டமைப்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த மாற்றத்தை நாம் விரைவுபடுத்தும்போது, ​ நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தில் நமது கவனம் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடக்க அமர்வில், அசோசேம் அமைப்பின் தலைவரும், யுஎன்ஓ மிண்டா நிறுவனத்தின் தலைவருமான திரு நிர்மல் கே. மிண்டா, அசோசேம் தேசிய பசுமைப் போக்குவரத்து மன்றத்தின் தலைவரும், ஜேபிஎம் குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு நிஷாந்த் ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280234&reg=3&lang=1

***

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2280482) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati