ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் டெக்ஸ் கண்காட்சி ஜூலை 14-ல் தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 02 JUL 2026 4:28PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வான பாரத் டெக்ஸ் கண்காட்சி, 2026 ஜூலை 14 முதல் 17 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன், ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்கள், தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, ஜவுளி, ஆடை அலங்காரம், நிலைத்தன்மை, தொழில்நுட்பம், புத்தாக்கம், முதலீடு, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும்.

 

ஜவுளித்துறை தொடர்பான பிரதமர் திரு நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையில் உத்வேகம் பெற்று, பாரத் டெக்ஸ் 2026, ஜவுளி மதிப்புச் சங்கிலி முழுவதும் வணிகம், முதலீடு, மூலப்பொருள் கொள்முதல், புத்தாக்கம், கொள்கை உரையாடல், உத்திசார் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான ஒரு முதன்மை உலகளாவிய தளமாக இந்த நிகழ்வு உருவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வாங்குபவர்கள், பிராண்டுகள், மூலப்பொருள் கொள்முதல் ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மாநில அரசுகள், சர்வதேச தூதுக்குழுக்கள், வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்.

 

இந்த ஆண்டு நிகழ்வில், மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்கள் ஆதரவு மாநிலங்களாக பங்கேற்கின்றன. ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கண்காட்சியாளர்களாகப் பங்கேற்கின்றன.

 

நியூசிலாந்து, இலங்கை, ஜோர்டான், கம்போடியா, புருணே உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர் குழுக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளன. அமெரிக்கா , ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் தொழில், வணிகக் குழுக்கள் இதில் பங்கேற்கும்.

 

டிஜிட்டல் வசதியை வலுப்படுத்தும் நோக்கில், கண்காட்சியாளர்கள், வாங்குபவர்கள், பிரதிநிதிகள், பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் அம்சமாக, சமீபத்தில் பாரத் டெக்ஸ் 2026 மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் தகவல்களுக்கு, www.bharat-tex.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280341&reg=3&lang=1

(Release ID : 2280341)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2280454) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada