நிதி அமைச்சகம்
மே 2026 (2026-27 நிதியாண்டு) வரையிலான இந்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்திர ஆய்வறிக்கை வெளியீடு
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:44PM by PIB Chennai
மத்திய அரசின் கணக்குகள் குறித்த மே மாதத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வறிக்கை வெயிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
மே 2026 வரையிலான காலத்தில், மத்திய அரசு மொத்தம் ரூ. 7,18,669 கோடி வருவாயை ஈட்டியுள்ளது (இது 2026-27 ஆம் ஆண்டிற்கான மொத்த வரவு மதிப்பீட்டில் 19.7% ஆகும்). இதில் ரூ. 3,48,138 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கான நிகர பங்கு), ரூ. 3,50,867 கோடி வரி-அல்லாத வருவாய் மற்றும் ரூ. 19,664 கோடி கடன்-அல்லாத மூலதன வரவுகள் ஆகியவை அடங்கும். இக்காலகட்டத்தில், வரிப் பகிர்வின் ஒரு பகுதியாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ. 1,75,557 கோடியை மாற்றியுள்ளது; இது முந்தைய ஆண்டை விட ரூ. 12,086 கோடி அதிகமாகும்.
மத்திய அரசின் மொத்தச் செலவு ரூ. 8,81,023 கோடியாக உள்ளது (இது 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 16.5% ஆகும்); இதில் ரூ. 6,30,020 கோடி வருவாய் கணக்கிலும், ரூ. 2,51,003 கோடி மூலதனக் கணக்கிலும் செலவிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், ரூ. 1,81,461 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், ரூ. 75,542 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279444®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2279637)
आगंतुक पटल : 7