பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2026 9:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஈரான் நாட்டின் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

மேற்காசிய பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் அதிபர் பெசெஷ்கியான் விளக்கினார். இப்பிரச்சனையில் இதுவரை எட்டப்பட்டுள்ள பரஸ்பர புரிதலை வரவேற்றுள்ள பிரதமர், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியாக மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை இப்பேச்சுவார்த்தையின் போது மீண்டும் வலியுறுத்தினார்.

இப்பிராந்தியத்தில் நிலையான அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், கடல்சார் போக்குவரத்து, வணிகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

 

(Release ID: 2279626)

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2279636) வருகையாளர் எண்ணிக்கை : 56