விவசாயத்துறை அமைச்சகம்
‘விவசாய நிலங்களைக் காப்போம்’ பிரச்சார நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:01PM by PIB Chennai
ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பாவல் விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற ‘விவசாய நிலங்களைக் காப்போம்’ பிரச்சார நிறைவு விழாவில், மத்திய வேளாந்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கலந்து கொண்டார். ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹரியானா மாநில உழவர் உற்பத்தியாளர் குழுவும் அப்போது தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், வளமான, தற்சார்பு கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க விவசாயிகள் பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும் என்றார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு நிலத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்தார். மண் பரிசோதனையின் அடிப்படையில் தேவையான அளவு உரங்களை மட்டுமே பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இயற்கை விவசாயம், நீர் பாதுகாப்பு ஆகியவை வளமான எதிர்காலத்திற்கான வழிகள் என வலியுறுத்திய அவர், இப்பிரச்சாரம் இனி நீடித்த தேசிய இயக்கமாக மாற்றப்படும் என அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279405®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279622)
आगंतुक पटल : 6