மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மனநலம் குறித்து ஆராய்வதற்கான தேசிய பணிக்குழு 10 மாநிலங்களில் கள ஆய்வை நடத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 30 JUN 2026 3:51PM by PIB Chennai

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலம், தற்கொலைத் தடுப்புக்கான தேசிய பணிக்குழு, கடந்த ஆண்டு மே மாதம் முதல் 10 மாநிலங்களிலுள்ள 30 கல்வி நிறுவனங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இப்பணிக்குழு பன்னோக்கு, சமத்துவ அணுகுமுறையை உறுதி செய்ய ஏதுவாகப் பல்வேறு தரப்பினருடன் 25 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள், சாதிப் பாகுபாடு, பாலினப் பிரச்சினை போன்ற பல்வேறு முக்கிய தலைப்புகளில் 2026-ல் கூடுதல் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க, மனநலப் பிரச்சினைகளை ஆராய உச்ச நீதிமன்றத்தால் 2025 மார்ச் 24 அன்று இப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய இப்பணிக்குழுவுக்கு 2026 அக்டோபர் 31 வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது. ஆய்வு தரவுகளை அறிவியல் பூர்வமாகப் பகுப்பாய்வு செய்யப் பேராசிரியர் டி.சி.ஏ. ஆனந்த் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279356&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2279541) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Malayalam