ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தேசிய கிராமப்புற வளர்ச்சி மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
28 JUN 2026 8:54PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் அடிப்படை நிலையில் அதற்கான உத்வேகத்தை அளிக்கும் வகையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் தேசிய கிராமப்புற வளர்ச்சிக்கான மாநாட்டை மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் புதுதில்லியில் ஜூன 28 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் முதல் நாளில் நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில், மாநிலங்களைச் சேர்ந்த துறைசார்ந்த நிபுணர்களும், மூத்த அதிகாரிகளும், ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.
இம்மாநாட்டின் இரண்டாம் நாளான நாளை (ஜூன் 29) அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டு, கிராமப்புற மேம்பாடு தொடர்பான கொள்கை வழிகாட்டுதல்கள், ஒருங்கிணைந்த செயல்திட்டம் போன்றவை குறித்து விவாதிக்க உள்ளனர்.
இம்மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கான சிந்தனையுடன் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
கிராமப்புறங்கள் இந்தியாவின் ஆன்மாவாகத் திகழ்கிறது என்றும், அவை ஜனநாயக நடைமுறைகளின் வலிமையான அலகு என்றும் குறிப்பிட்டார். திட்டங்களை வகுப்பதுடன் அவை பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம் உள்ளதாக திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் கூறினார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278667®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2279390)
आगंतुक पटल : 7