நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் உட்கட்டமைப்பு முதலீட்டை விரைவுபடுத்தவும், நிறுவன ரீதியான மூலதனத்தை ஈர்க்கவும் தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியத்தில் கூடுதலாக ரூ. 30,000 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 7:16PM by PIB Chennai

உட்கட்டமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற துறைகளில் இந்தியாவின் முதலீட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியத்தின் (என்ஐஐஎஃப்) புதிய மற்றும் வரவிருக்கும் நிதியங்களுக்கு, மத்திய அரசு கூடுதலாக ரூ. 30,000 கோடி முதலீடு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், என்ஐஐஎஃப்-க்கான இந்திய அரசின் மொத்த முதலீட்டு உறுதிப்பாடு ரூ. 60,000 கோடியாக உயர்ந்துள்ளது.

 

தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட நிதியாகும். இது தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் லிமிடெட் (NIIFL) நிறுவனத்தால் தொழில்முறையாக நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. என்ஐஐஎஃப்-ல் மத்திய அரசு 49% பங்குதாரராக உள்ளது. மேலும், இது தற்போது தனது நிதிகள் மற்றும் முதலீட்டு உத்திகள் முழுவதும் சுமார் ரூ. 40,000 கோடி மூலதன உறுதிப்பாடுகளை நிர்வகித்து வருகிறது. என்ஐஐஎஃப், பெரிய முதலீட்டுத் தொகுப்பு வெளியேற்றங்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ. 12,000 கோடியைத் திரும்ப அளித்து, மூலதனப் பயன்பாடு மற்றும் வசூலில் ஒரு வலுவான சாதனைப் பதிவை வெளிப்படுத்தியுள்ளது.

 

அடிப்படைச் சொத்துகள் மற்றும் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம், பொருளாதாரத்தில் ஒரு ஊக்கமளிக்கும் தாக்கத்தை தற்போதைய அரசு ஒதுக்கீடு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, உயர்தர உள்கட்டமைப்பு வசதிகளுடன் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியத் துறைகளின் வளர்ச்சியும் சாத்தியமாகும். இது தன்னிறைவுக்கு வழிவகுப்பதுடன்,  2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை  உருவாக்கும் நாட்டின் பயணத்திற்கும் வலிமை சேர்க்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279107&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2279174) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada