சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணு சுஷ்ருத் கிளினிக்குகள் சுகாதாரக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு உதவிடும் - மத்திய அமைச்சர் திரு ஜே பி நட்டா

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:54PM by PIB Chennai

புறநோயாளிகளுக்கு எளிதில் சுகாதார சேவைகள் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சிறு மருத்துவ கிளினிக்குகளில் டிஜிட்டல் முறை அடிப்படையிலான செயல்பாடுகள் இல்லாத காரணத்தால், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. மேலும் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு மென்பொருட்கள் இதுபோன்ற சிறியரக மருத்துவ மையங்களுக்கு சிக்கலானதாகவும், அதிக செலவை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளன.

இதன் காரணமாக, சுகாதாரக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதில் இத்தகைய சிறிய ரக மருத்துவ மையங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் பொது சுகாதார நிலையங்களில் இந்த மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு மென்பொருளை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

எனவே ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் இந்த மென்பொருளை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுபோன்ற சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் உள்ள சிக்கல்களை களையும் வகையில் மின்னணு சுஷ்ருத் கிளினிக்குகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ. பி. நட்டா தொடங்கி வைத்தார்.

வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மையமாகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளினிக்குகளில் குறைந்த செலவில் டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278996&reg=3&lang=1

****

TV/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2279124) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu