சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆயுஷ்மான் சாரதி, பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்திற்கான வாட்ஸ்அப் சாட்பாட் செயலியை மத்திய அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 4:52PM by PIB Chennai
நாட்டின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆயுஷ்மான் சாரதி - பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்திற்கான வாட்ஸ்அப் சாட்பாட் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா இன்று தொடங்கி வைத்தார்.
தேசிய சுகாதார ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஆயுஷ்மான் சாரதி செயலி மக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்ட சேவைகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கிடைக்க வகை செய்கிறது. இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாட்பாட் செயலி பயனாளிகள், அரசு அலுவலகங்கள் அல்லது அழைப்பு மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி, அத்தியாவசியமான மருத்துவ சேவைகளை 24 மணிநேரமும் எந்த இடத்தில் இருந்தும் பெறுவதற்கு உதவுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சுகாதார சேவைகள் எளிதாகவும், வெளிப்படையாகவும் மக்களை மையமாகக் கொண்டாதாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது. பயனாளிகள் இதற்கான கி.ஆர். கோட் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ, அல்லது +91 72908 23838 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் “HI” என்ற செய்தியை அனுப்புவதன் மூலமாகவோ இந்த சாட்பாட் ஆயுஷ்மான் சாரதியின் சேவைகளை பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278994®=3&lang=1
****
TV/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2279093)
आगंतुक पटल : 12