புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தொழில்துறை பொருட்களின் உற்பத்தி மே மாதத்தில் 5.1 சதவீத வளர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளது

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:00PM by PIB Chennai

தொழில்துறை உற்பத்தி குறித்த குறியீடுகளை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2022 – 23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2026  ஜூன் 1 அன்று வெளியிடப்பட்ட இந்த குறியீடுகள் குறித்த அறிக்கையில் மொத்த விற்பனை விலைக் குறியீடுகள் கணக்கிடப்படுகின்றன. மேலும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் உற்பத்தி சார்ந்த குறியீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தொழில் உற்பத்தித் துறை சார்ந்த குறியீடுகளை கணக்கிடும் முறையை, மொத்த விற்பனைக் குறியீடு கணக்கிடும் முறையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை அடிப்படையிலான குறியீட்டு முறைக்கு மாற்றுவது குறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் ஆய்வு செய்தது.

இதனையடுத்து உற்பத்திப் பொருட்களின் விலைகள் அடிப்படையிலான குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, 463 பொருட்களில் 234 பொருட்களுக்கான குறியீடுகள் இந்த புதிய முறைப்படி கணக்கிடப்படுகிறது.

இதன்படி சுரங்கத்துறையின் உற்பத்தி விகிதம் 1.6% வரை குறைந்துள்ளது. மேலும் உற்பத்தி மின்சாரம் & எரிவாயு விநியோகம் & குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை ஆகிய துறைகளில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி சார்ந்த குறியீடுகளை பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுப்பதற்காக பயன்படுத்துவோர், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட குறியீடுகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நடைமுறை உற்பத்தி மற்றும் மின்சாரத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278961&reg=3&lang=1

***

SS/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2279071) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Kannada