உள்துறை அமைச்சகம்
யமுனா நதிநீர் திட்டத்தின் கட்டுமானம், அமலாக்கத்திற்கான முக்கிய ஒப்பந்தம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
29 JUN 2026 3:04PM by PIB Chennai
யமுனா நதிநீர் திட்டத்தின் கட்டுமானம், அமலாக்கத்திற்கான முக்கிய ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில் ராஜஸ்தான், ஹரியானா மாநில அரசுகள் இன்று (29.06.2026) புதுதில்லியில் கையெழுத்திட்டன. இந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மக்கள் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக எதிர்கொண்டு வந்த தண்ணீர் தொடர்பான பிரச்சனைக்கு இந்த ஒப்பந்தம் தீர்வு கண்டுள்ளது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கியுள்ள 'பேச்சுவார்த்தை மூலம் தீர்வு' என்ற மந்திரத்திற்கு இந்த ஒப்பந்தம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார். ஒத்துழைப்புடன் கூட்டாட்சி என்ற மனப்பான்மையுடன் மாநிலங்கள் முன்னேறினால், மூன்று தசாப்தங்களாக நீடிக்கும் பிரச்சனையைக்கூட எளிதாகத் தீர்க்க முடியும் என்பதை இந்த ஒப்பந்தம் நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.
ஹரியானா, ராஜஸ்தான், மாநிலங்கள் மத்திய நீர் ஆணையத்துடன் இணைந்து தயாரித்த இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு, வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு சர்ச்சையற்ற ஒப்பந்தமாக நிலைத்திருக்கும் என்று திரு அமித் ஷா கூறினார். மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமையில், ஒரு சில நாட்களிலேயே தீர்வு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள சிகார், சுரு, ஜுன்ஜுனு மாவட்டங்களுக்கும், ஹரியானாவில் உள்ள பிவானி, ஃபதேஹாபாத் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படும்.
இந்தத் திட்டம், ராஜஸ்தானின் வறட்சியான, ஓரளவு வறட்சியான பகுதிகளில் நம்பகமான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்து, சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் லட்சக் கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு, பங்கேற்கும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், இந்தத் திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கான அடித்தளத்தையும் இந்த ஒப்பந்தம் அமைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278930®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2279063)
आगंतुक पटल : 10