மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருத்துவ உபகரண உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், மத்திய ரசாயனங்கள் & உரத்துறை அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 29 JUN 2026 2:39PM by PIB Chennai

மருத்துவ உபகரண உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, இறக்குமதி சார்ந்திருக்கும் நிலையை குறைப்பது, புத்தாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது ஆகிய நோக்கங்களுக்கான திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து மத்திய ரசாயனங்கள் & உரத்துறை அமைச்சகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் திட்டம், மருத்துவ உபகரணங்களுக்கான மருத்துவ ஆய்வுகள் ஆதரவுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ளது.

குறைந்தபட்ச முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இறக்குமதி சார்பு நிலையை குறைக்கும் வகையில், முக்கிய உதிரி பாகங்கள், மூலப் பொருட்கள், முழுமையான மருத்துவ உபகரணங்கள், துணைக் கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு செலவுத் தொகையை திரும்பப் பெறும் அடிப்படையில் 10 கோடி ரூபாய் வரையிலான ஒருமுறை மூலதன மானியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மருத்துவ உபகரணங்களுக்கான மருத்து ஆய்வு ஆதரவு திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை, செயல்திறன் மதிப்பீடு, விற்பனைக்குப் பிந்தைய கண்காணிப்பு ஆய்வு போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக தகுதியுள்ள நிறுவனங்களுக்கு செலவுத் தொகையை திரும்பப்பெறும் அடிப்படையில் 5 கோடி ரூபாய் வரையிலான நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை http://smdi.lsssdc.in என்ற இணையதள முகவரியில் அடுத்த மாதம் 23-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை இதர விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்த விரிவான விவரங்களை மருத்துவத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pharma-dept.gov.in/schemes. என்ற தளத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278917&reg=3&lang=1

***

SS/SV/LDN/KR


(रिलीज़ आईडी: 2279049) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam