பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் சக்தியின் வலிமையையும் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2026 8:50AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகளிர் சக்தியே வலிமையான இந்தியாவின் அடையாளம் என்று கூறியுள்ளார். நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் ஆகியோர், தங்களின் அசைக்க முடியாத உறுதி, அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை ஆகியவற்றின் மூலம், ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்.

"அனைத்து தேவர்களாலும், முனிவர்களாலும் வணங்கப்படும் அம்பிகைக்கு நாங்கள் எங்கள் வணக்கங்களைச் செலுத்துகிறோம். அவள் தனது தெய்வீக சக்தியால் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறாள். மேலும் அனைத்து தெய்வங்களின் கூட்டு சக்திகளின் வடிவமாகவும் திகழ்கிறாள். பிரபஞ்சத்தின் அந்த அன்னை எங்களுக்கு நல்வாழ்வை அருளட்டும்" என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.

***

Release ID: 2252802)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2278833) வருகையாளர் எண்ணிக்கை : 31