பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படைக் கப்பல்களான உதயகிரி, கவரட்டி, சக்தி ஆகியவை தாய்லாந்தின் சத்தாஹிப் துறைமுகத்திற்குச் சென்றடைந்தன
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUN 2026 1:40PM by PIB Chennai
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான தங்களது செயல்பாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையைச் சேர்ந்த உதயகிரி, கவரட்டி, சக்தி ஆகிய கப்பல்கள் தாய்லாந்தின் சத்தாஹிப் துறைமுகத்திற்குச் சென்றடைந்தன.
கிழக்குக் கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தா தலைமையில் சென்ற இந்தக் கப்பல்களை தாய்லாந்து கடற்படை வரவேற்றது. இந்தத் துறைமுகப் பயணமானது, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்ச்சியான கடல்சார் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் இது, இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நெருக்கமான, நீண்டகால கடல்சார் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது.
கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தப் பயணத்தில் தொழில்முறைப் பரிமாற்றங்கள், செயல்பாட்டு கலந்துரையாடல்கள், விளையாட்டு நிகழ்வுகள், சமூகத் தொடர்பு ஆகியவை இடம்பெறும்.
இந்தத் துறைமுகப் பயணமானது, இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான தோழமை, பரஸ்பர ஒத்துழைப்பு, இருதரப்பு கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது, இந்தியக் கடற்படைக் கப்பல்களின் உள்நாட்டு வடிவமைப்பு, கட்டுமானம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிக்காட்டி, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களையும், தகுதிகளையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278375®=3&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2278395)
வருகையாளர் எண்ணிக்கை : 52