பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்திற்குச் சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 27 JUN 2026 12:47PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க "லோகாயன் 26" என்ற கடல் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, 2026 ஜூன் 26 அன்று அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் துறைமுகத்திற்குச் சென்றடைந்தது. நார்ஃபோக்கிலிருந்து புறப்பட்ட இந்தப் பயணம், மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செசபீக் & டெலாவேர் கால்வாய் வழியாகச் சென்றது.

ஐஎன்எஸ் சுதர்ஷினியின் பால்டிமோர் பயணம், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தையும், இந்தியக் கடற்படைக்கும் அமெரிக்கக் கடற்படைக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்புப் பிணைப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது. அங்கு இந்தக் கப்பல் உள்ள நாட்களில், கடல்சார் பணிகளிலும் சமூக நலப் பணிகளிலும் ஈடுபடும். அத்துடன், அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மேரிலாந்தில் நடைபெறும் 'செயில் 250 மேரிலாந்து' என்ற கொண்டாட்டத்திலும் இந்தக் கப்பல் பங்கேற்கும்.

பால்டிமோர் சென்றடைவதற்கு முன்பு, ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் 2026 ஜூன் 19 முதல் 23 வரை நார்போக்கில் நடைபெற்ற 'செயில் 250 வர்ஜீனியா' கொண்டாட்டங்களில் பங்கேற்றது. அப்போது, உலகெங்கிலும் இருந்து வந்த உயரமான பாய்மரக் கப்பல்களுடன் இணைந்து, ' பரேட் ஆஃப் செயில்'  'சிட்டி க்ரூ பரேட்' ஆகிய கப்பல் அணிவகுப்புகளில் இந்தக் கப்பல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

கொச்சியிலிருந்து நார்ஃபோக்கிற்கு ஐந்து மாதங்களில் 13,000 கடல் மைல்களுக்கும் மேலாகப் பயணித்த இந்த கடல்கடந்த பயணம், இந்தியாவின் கடலியல் மரபுகளுக்கும் , கடல்களுக்கு அப்பால் நட்பு, ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் 'வசுதைவ குடும்பகம்' என்ற தத்துவத்தின் உணர்விற்கும் ஒரு சான்றாகத் திகழ்கிறது .

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278366&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2278374) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati