ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலாவது தேசிய ஊரக மேம்பாட்டு மாநாடு: ஜூன் 28-29 தேதிகளில் தில்லியில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 26 JUN 2026 6:55PM by PIB Chennai

முதலாவது தேசிய ஊரக மேம்பாட்டு மாநாடு 2026, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் புதுதில்லியில் ஜூன் 28-29 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் ஒன்றிணைந்து, முழுமையான ஊரக வளர்ச்சி குறித்து விவாதிப்பதுடன், முக்கிய முதன்மைத் திட்டங்களை மறுஆய்வு செய்து, கிராமப்புற இந்தியாவிற்கான எதிர்கால செயல்திட்டத்தையும் வகுப்பார்கள்.

'வளர்ச்சியடைந்த கிராமம், வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு சவுகான் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம், 2025- திறம்பட செயல்படுத்துதல், கிராமப் பஞ்சாயத்து அளவில் திட்டமிடல் செயல்முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் வளங்களைச் திறமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மீது இந்த மாநாட்டின் விவாதங்கள் கவனம் செலுத்தும். மேலும், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், பிரதமரின் கிராமச்  சாலைகள்  திட்டம், தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் தேசிய சமூக உதவித் திட்டம் உள்ளிட்ட முக்கிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்தும் இந்த மாநாடு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

'லட்சாதிபதி சகோதரிதிட்டத்திற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், கிராமப்புறத் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் சந்தை இணைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278280&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2278372) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , हिन्दी , Telugu , Kannada , Malayalam