ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை உலகத்தரத்திற்கு உயர்த்த திட்டம்
प्रविष्टि तिथि:
26 JUN 2026 7:47PM by PIB Chennai
புதுதில்லியில் 'தேசிய ஊரக வளர்ச்சி மாநாடு 2026' ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார்.
கிராமப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்குச் சிறந்த சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், அவற்றை ஒரு தேசிய அடையாளமாக மாற்றுவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, 'சரஸ் வாழ்வாதாரக் காட்சியகம்' அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி புடவைகள், பஞ்சாபின் புல்காரி, ஜம்மு-காஷ்மீரின் பஷ்மினா, குஜராத்தின் படோலா மற்றும் அஜ்ரக் ஜவுளிகள், ஆந்திராவின் கலம்ஹாரி, தெலங்கானாவின் இக்காத், மிசோரம் மற்றும் கேரளாவின் கைத்தறித் துணிகள், ராஜஸ்தானின் பளிங்குச் சிற்பங்கள் என இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறக் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு மாநாட்டின் மிக முக்கிய அம்சமாக, 'சரஸ் சக்தி கலெக்ஷன்' என்ற பிரீமியம் பரிசுத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. கிராமப்புறச் சகோதரிகள் கையால் உருவாக்கிய நுணுக்கமான பொருட்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, பெருநிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் பரிசளிப்புத் தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278288®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2278371)
आगंतुक पटल : 8