சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதாரத் துறையில் சட்ட சீர்திருத்தங்கள்- மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டங்களின் கீழ் சிறு குற்றங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
26 JUN 2026 12:39PM by PIB Chennai
பொது சுகாதாரப் பாதுகாப்புகளுக்குப் பங்கம் விளைவிக்காமல், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மேம்படுத்துதல், வணிகங்களுக்கான இணக்கச் சுமையைக் குறைத்தல், விகிதாசார ஒழுங்குமுறை அமலாக்கத்தை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களுடன், 1940-ம் ஆண்டின் மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 2006-ம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்டம் ஆகியவை தொடர்பான முக்கிய சீர்திருத்தங்களை 2026-ம் ஆண்டின் ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்தத் திருத்தங்கள், சில சிறிய தொழில்நுட்ப விதி மீறல்களைக் குற்றமற்றதாக்குவதையும், குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பதிலாக நிர்வாகத் தண்டனைகளை அமல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம், வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு, ஒழுங்குமுறைத் திறனையும் இவை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில், பொது சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வலுவான ஒழுங்குமுறைகள் மூலம் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும், அதே நேரத்தில் தேவையற்ற இணக்கச் சுமைகளைக் குறைத்து, திறமையான, வணிகத்திற்கு உகந்த ஒழுங்குமுறைச் சூழலை எளிதாக்குவதிலும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278118®=3&lang=1
(Release ID: 2278118)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278210)
आगंतुक पटल : 16