கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் 'அரசியலமைப்பு படுகொலை தினம்' அனுசரிப்பு

प्रविष्टि तिथि: 25 JUN 2026 9:27PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான கலாச்சார வளங்கள், பயிற்சி மையத்தின் புதுதில்லி வளாகத்தில் 'அரசியலமைப்பு படுகொலை தின' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 1975-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவையொட்டி நடத்தப்பட்ட இந்த விழாவில், மத்திய கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். ஜனநாயகத்தின் முக்கியத்துவம், அரசியலமைப்பு விழுமியங்கள், குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், ஜனநாயகம் என்பது இந்தியாவின் மரபணுவிலேயே இரண்டற கலந்துள்ளது எனத் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத நாயகர்களைப் போற்றுவதற்கான தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். அவசரநிலைக் காலம் ஜனநாயகம், சுதந்திரம், அரசியலமைப்பின் வலிமையை உணரச்செய்துள்ளதாகக் கூறினார்.

முன்னதாக, அவசரநிலையின் தாக்கத்தை விளக்கும் சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். இந்த விழாவில் மூத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278042&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2278068) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi