திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் சார்பாக 'திறன் திருவிழா - வாரங்கல் 2026'

प्रविष्टि तिथि: 25 JUN 2026 7:32PM by PIB Chennai

தெலங்கானாவின் வாரங்கலில் உள்ள ககாட்டியா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தில் 2026 ஜூன் 27அன்று 'திறன் திருவிழா, வாரங்கல் 2026' நடைபெறும் என்று திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

ககாட்டியா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு  அமைச்சகத்தின் இயக்குநர் திரு வி.எஸ். அரவிந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி திரு தௌதம் ராமு மற்றும் ககாட்டியா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தின் பதிவாளர் திரு கோமல் ரெட்டி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

எதிர்வரும் திறன் திருவிழா, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களை ஒன்றிணைத்து, தெலங்கானா மாநிலம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு 5,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது. திறன்மிக்க விண்ணப்பதாரர்களைத் தொழில் நிறுவனங்களுடன் நேரடியாக இணைப்பது, நிகழ்விடத்திலேயே நேர்காணல்களை நடத்துவது மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி  வாய்ப்புகள் மூலம் நிலையான வாழ்வாதாரத்திற்கான வழிகளை வலுப்படுத்துவது ஆகியவை இந்த திருவிழாவின் நோக்கங்களாகும்.

 

"திறன் பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ஆக்கப்பூர்வமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை திறன் திருவிழா  பிரதிபலிக்கிறது. வேலை வழங்குநர்களையும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களையும் ஒரே தளத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், திறன் பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்பை நோக்கிய வலுவான பாதைகளை நாங்கள் உருவாக்குகிறோம்”, என்று திரு வி.எஸ். அரவிந்த் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277958&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2278059) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati