வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை விரைவுபடுத்த ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள், தொழிற் சங்கங்களுடன் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆலோசனை

प्रविष्टि तिथि: 25 JUN 2026 5:03PM by PIB Chennai

ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கவும், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், புதுதில்லியில் ஜூன் 24, 2026 அன்று ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள், தொழிறசங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தனிப்பட்ட நிறுவனங்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதுடன், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல், புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், புதிய தயாரிப்புகளை ஊக்குவித்தல், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி செயல்பாட்டில் ஒவ்வொரு அமைப்பின் பங்களிப்பையும் அதிகரித்தல் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முந்தைய ஆலோசனைக் கூட்டத்தின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வர்த்தகச் செயல்பாடுகளில் முன்னறிவிப்புத் தன்மையை அதிகரிக்கவும், வர்த்தக நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், சட்டரீதியான, எளிதாக்கல் குழுக்களின் ஆலோசனை  கூட்டங்களுக்கான தற்காலிக அட்டவணை இறுதி செய்யப்பட்டு வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். விதிமுறைகள் குழு, கொள்கை தளர்வுக் குழு, ஏற்றுமதி-இறக்குமதி எளிதாக்கல் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இனி நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் இரு வாரங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கவுள்ளது. அதேவேளையில் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு மாதந்தோறும் ஆலோசனை மேற்கொள்ளும். இந்த முயற்சி, குறிப்பிட்ட காலத்திற்குள் கோப்புகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பது, நிலுவையில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கையை குறைப்பது, கூட்டத்தின் குறிப்புகளை விரைவாக வெளியிடுவது, ஏற்றுமதியாளர்களுக்கு அதிக முன்னறிவிப்பு,  நம்பகத்தன்மை கொண்ட எளிதாக்கல் சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்துடன் இணைந்து செயல்படவும், அளவிடக்கூடிய, விளைவு சார்ந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவும் திரு. கோயல் வலியுறுத்தினார். உலகளவிலான  சந்தைகளுடனான இந்தியாவின் இணைப்புப் பாலமாகச் செயல்படும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள், மத்திய அரசுடன் நெருக்கமான செயல்பட வேண்டும் என்றும், நாட்டின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் பொதுவான இலக்கை அடைய இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து உருவாகும் சந்தை வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திரு பியூஸ் கோயல்  வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277822&reg=3&lang=1

(Release ID: 2277822)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2277975) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati