வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, உயர்தர பங்கனப்பள்ளி மாம்பழங்களின் முதல் வணிகரீதியான கடல்வழி ஏற்றுமதியை வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சாத்தியமாக்கியது

प्रविष्टि तिथि: 25 JUN 2026 12:42PM by PIB Chennai

இந்தியாவின் வேளாண் விளைபொருள் ஏற்றுமதித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், லக்னோவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மத்திய வெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு உயர்தர பங்கனப்பள்ளி மாம்பழங்களின் முதலாவது  வர்த்தக ரீதியிலான கடல்வழி ஏற்றுமதியை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

5 மெட்ரிக் டன் பங்கனப்பள்ளி மாம்பழங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, ஓசும் புட் சொல்யூஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்தால் 2026 ஜூன் 11 அன்று ஏற்றுமதி செய்யப்பட்டு, 2026 ஜூன் 24 அன்று சிங்கப்பூரைச் சென்றடைந்தது. இந்த ஏற்றுமதி, உயர்தர இந்திய மாம்பழங்களுக்கான சந்தை வாய்ப்பை விரிவுபடுத்துவதுடன், இந்தியாவின் தோட்டக்கலை விளைபொருட்களுக்கான செலவு குறைந்த, நிலையான ஏற்றுமதி போக்குவரத்து நடைமுறைகளை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இந்த வகை மாம்பழங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 'நல்ல விவசாய நடைமுறைகள்' என்று சான்றளிக்கப்பட்ட தோட்டங்களிலிருந்து பெறப்பட்டு, கர்நாடகாவில் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால்  அங்கீகரிக்கப்பட்ட சிப்பமிடும் நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்டன. இந்த நடைமுறைகள் அனைத்தும் சிங்கப்பூர் நிர்ணயித்த தரம், தாவர சுகாதார விதிமுறைகளின்படி கையாளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277650&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2277900) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Telugu , Kannada