புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நாட்டின் மேம்பாட்டுப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும் திட்டத்திற்காக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் - கிராம் அமைப்பு இடையே புரிந்துணர்வு அறிக்கை கையெழுத்தாகியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2026 12:06PM by PIB Chennai
அடிப்படை ஆய்வு, பணிசார்ந்த நிபுணர்களை பணியில் ஈடுபடுத்துவதற்காக, மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், 'கிராஸ்ரூட்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வகேசி மூவ்மென்ட்' (கிராம்) அமைப்புடன், இரண்டு புரிந்துணர்வு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு நிர்வாகப் பிரிவு தலைமை இயக்குநர் திரு பி ஆர் மேஷ்ராம் கலந்து கொண்டார். கிராம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பசவராஜு ஆர் ஷ்ரேஷ்டா, அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுப் பிரிவின் பயிற்சிப் பிரிவு இயக்குநர் திரு. பிரசூன் வர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒருங்கிணைந்த முயற்சி, மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் - கிராம் அமைப்பு இடையேயான, நடைமுறை சார்ந்த கூட்டுத் தளமாகும். இதில், ஆர்வமும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்ட தனிநபர்கள், அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். இத்திட்டத்தின் மூலம், துறை சார்ந்த நிபுணர்கள், தற்போது நடைபெற்று வரும் அல்லது புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், ஆராய்ச்சியின் மூலம் புதுமையான தீர்வுகளை உருவாக்கப் உதவிடுவார்கள். மேலும் முக்கிய அம்சங்களான வளர்ச்சி, திறன் மேம்பாடு, நிர்வாகம் சார்ந்த சவால்களைத் துல்லியமாகவும், புதுமையான முறையில் எதிர்கொள்ள உறுதுணையாக இருப்பர். அமைச்சகத்தின் நலனுக்காக, இந்த நிபுணர்களின் திறன்களைப் பயன்படுத்தும் அதே வேளையில், பொதுக் கொள்கை, நிர்வாகம் சார்ந்த நடைமுறை அனுபவத்தை இவர்களுக்கு வழங்குவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277635®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277846)
வருகையாளர் எண்ணிக்கை : 51