பிரதமர் அலுவலகம்
மகளிர் சக்திக்குத் தாம் எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர், சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2026 9:29AM by PIB Chennai
சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் முயற்சியை நாடு முழுவதும் உள்ள பெண்கள் பாராட்டி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மகளிர் சக்திக்குத் தாம் எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அம்சத்தை செயல்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நாடாளுமன்ற மக்களவையிலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் முயற்சியை இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் பாராட்டி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அம்சத்தை செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, இந்தியாவின் மகளிர் சக்திக்கு நான் எழுதும் கடிதத்தைப் பகிர்கிறேன்….”
***
(Release ID: 2251739)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277833)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam