பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா ஜோதிராவ் பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்; ஜோதிராவ் பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கின

प्रविष्टि तिथि: 11 APR 2026 9:14AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மகாத்மா ஜோதிராவ் பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவம், நீதி, கல்வி ஆகிய இலட்சியங்களுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட சமூக சீர்திருத்தவாதி என்று அவரைப் புகழ்ந்துரைத்து, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பெண்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காகப் போராடியதில் மகாத்மா பூலே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும், தமது முயற்சிகளின் மூலம் கல்வியை அதிகாரமளிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாற்றினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு அந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கம் அமைகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், மகாத்மா பூலே எவ்வாறு பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதையும், கல்வி, கற்றல், அனைவரின் நலன் ஆகியவற்றிற்கு அவர் அளித்த முக்கியத்துவம் இன்றைய காலகட்டத்திலும் எவ்வாறு மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்பதையும் எடுத்துரைக்கும் தமது கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார். சமூக முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் அவரது சிந்தனைகள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டும் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"சமத்துவம், நீதி, கல்வி ஆகிய லட்சியங்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிராவ் பூலேவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பெண்கள், விளிம்புநிலை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காகப் போராடியதில் அவர் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார். அவரது முயற்சிகளின் மூலம், கல்வி என்பது அதிகாரமளிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்தது. இந்த ஆண்டு, அவரது 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கமாகும். சமூக முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில், அவரது சிந்தனைகள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டட்டும்."

"மகாத்மா பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நாம் தொடங்கும் இவ்வேளையில், அவர் எவ்வாறு வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதையும், கல்வி, கற்றல், அனைவரின் நலன் ஆகியவற்றிற்கு அவர் அளித்த முக்கியத்துவம் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு பொருத்தமாக உள்ளது என்பதையும் பற்றி எனது எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன்."

"மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் கல்வி, அறிவு, பொது நலன் ஆகியவற்றுக்காக அர்ப்பணித்தார். எனது இந்தக் இக்கட்டுரையில், அவர் எவ்வாறு கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறார் என்பது குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்."

****

(Release ID: 2251060)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2277667) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam