எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு துறை டிஜிட்டல் மயமாக்கல் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வைக்கு வலுசேர்க்கும்: மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUN 2026 1:32PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் எஃகு துறையில் டிஜிட்டல் மயமாக்கல் குறித்த ‘சிந்தனை அரங்கம் 2026’ மாநாட்டில் மத்திய எஃகு, கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி உரையாற்றினார். அப்போது, எஃகு துறையின் எதிர்காலம் உற்பத்தி திறனை மட்டும் சார்ந்திருக்காமல், திறன்மிக்க, தரவு சார்ந்த உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதைப் பொறுத்தே அமையும் என்றார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு எஃகு துறை ஒரு முக்கிய தூணாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2018 முதல் உலகளவில் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதாகவும், கச்சா எஃகு உற்பத்தி ஆண்டுதோறும் சுமார் 8 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எஃகு உற்பத்தித் திறனை 2030-க்குள் 300 மில்லியன் டன்னாகவும், 2035-க்குள் 400 மில்லியன் டன்னாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை எஃகு துறையில் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் எஃகு அமைச்சகத்தின் உயரதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், முன்னணி புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277384&reg=3&lang=1  

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2277527) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu , Kannada