புவி அறிவியல் அமைச்சகம்
இந்தியாவின் கடல்சார் துறைகளைப் பாதுகாக்க இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் ''எல் நினோ' தொடர்பான அறிக்கைகளை வெளியிடுகிறது
प्रविष्टि तिथि:
23 JUN 2026 5:55PM by PIB Chennai
தற்போது நிலவி வரும் 'எல் நினோ' நிகழ்வு, கடல்சார் துறைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் சிறப்பு 'எல் நினோ' குறித்த தரவுகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. இதற்கான முதல் சிறப்பு அறிக்கை, 2026 ஜூன் 22 அன்று இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செவெல்லா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி வெளியிட்டார்.
'எல் நினோ' நிகழ்வு தொடர்ந்து தீவிரமடைந்து வருவதையும், குளிர்காலத்தில் (நவம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரை) அதன் தாக்கம் உச்சத்தை எட்டும் என்றும் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இதன் விளைவாக, ஏப்ரல்/மே 2027 வரை இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் (அரேபியக் கடல், வங்காள விரிகுடா ஆகிய இரண்டிலும்) உள்ள கடல்சார் சூழல் மண்டலம், வரும் மாதங்களில், குறிப்பாக மார்ச்-மே 2027 காலகட்டத்தில், வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பவளப்பாறைகள் வெளுத்துப்போதல், கடல்சார் வெப்ப அலைகள் அதிகரிப்பிற்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. மேலும், மீன்கள் தங்களுக்கு ஏற்ற வாழ்விடங்களுக்கு இடம்பெயர்தல் அல்லது புதிய மீன் குஞ்சுகளின் பெருக்கம் குறைதல் ஆகியவற்றால் மீன் பிடிப்பு (குறிப்பாக மத்தி, கானாங்கெளுத்தி வகைகள்) குறையக்கூடும். அத்துடன், 'எல் நினோ' தொடர்பான கடல்சார் சூழல் மாற்றங்களால் மீன்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட இயலாமல் போகலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277120®=3&lang=1
(Release ID: 2277120)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277269)
आगंतुक पटल : 11