MIFF banner

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: போலந்து நாட்டின் 'சில்வர்' திரைப்படம் தங்கச் சங்கு விருதை வென்றது

மும்பையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த 19-வது சர்வதேச திரைப்பட விழா ரவீந்திர நாட்டிய மந்திரில் நடைபெற்ற கண்கவர் நிறைவு விழாவுடன் இனிதே நிறைவடைந்தது. இந்த விழாவின் உயரிய விருதான சிறந்த சர்வதேச ஆவணப்படத்திற்கான 'தங்கச் சங்கு' விருதை, நடாலியா கோனியர்ஸ் இயக்கிய போலந்து நாட்டின் 'சில்வர்' ஆவணப்படம் வென்றது.  இந்திய திரையுலகின் சாதனைகளைக் கொண்டாடும் தேசிய அளவிலான போட்டியில், சிறந்த ஆவணப்படத்திற்கான 'வெள்ளிச் சங்கு' விருதை சாய்நாத் எஸ் உஸ்காய்கர் இயக்கிய 'வாய்' திரைப்படம் தட்டிச்சென்றது. சிறந்த குறும்படத்திற்கான விருது 'ஸ்மால் கிளவுட்ஸ்' திரைப்படத்திற்கும், சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது புவனேஷ் எம் குமார் இயக்கிய 'அங்காலம்மன் கோவில் தெருவிலிருந்து ஆம்ஸ்ட்ராங்' திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டது.  சர்வதேசப் பிரிவில், சிறந்த அனிமேஷன் படமாக ஜெர்மனியின் 'மாயாஸ் சாங்' தேர்வானது. ஈரான் நாட்டின் 'அண்டர் தி ஸ்னோ' சிறந்த சர்வதேசக் குறும்பட விருதைப் பெற்றது. மேலும், 'தி லாஸ்ட் ஷெல்டர்' திரைப்படம் வளர்ச்சியடைந்த இந்தியா பிரிவில் சிறப்பு விருதை வென்றது. மஹாராஷ்டிரா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, திரையுலக பிரமுகர்கள் பலர் பங்கேற்ற இவ்விழா, கதைகூறல் கலைக்கு மகுடம் சூட்டியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276323&reg=3&lang=1

***

SS/PD/KR

 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2276974   |   Visitor Counter: 8