ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உரப் பாதுகாப்பு: ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் நான்கு கப்பலால் வலுவடையும் நாட்டின் உர இருப்பு

प्रविष्टि तिथि: 22 JUN 2026 7:00PM by PIB Chennai

இந்தியாவின் உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், யூரியா, டிஏபி  மற்றும் சல்பர் ஏற்றிய நான்கு சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து, இந்தியாவின் கிருஷ்ணபட்டினம், காக்கிநாடா, பாரதீப் மற்றும் முந்த்ரா துறைமுகங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவை நாட்டின் உர இருப்பை மேலும் வலுப்படுத்தும்.

 

 2026, ஜூன் 22 நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த உர இருப்பு 196.08 லட்சம் டன்களாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த 168.67 லட்சம் டன்களை விட அதிகம். நடப்பு மார்ச் 1 முதல் ஜூன் 21 வரை உரங்களின் விற்பனை 153.4 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 13.2 லட்சம் டன் அதிகமாகும், இது நாட்டின் விவசாய வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.

 

உலகளாவிய சந்தை அதிர்வுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, அரசு உள்நாட்டு உற்பத்தியை 133.12 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. இதனுடன் 43.69 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், காரீஃப் பருவத்திற்காக 90 லட்சம் டன்னுக்கும் அதிகமான யூரியா மற்றும் பி&கே  உரங்கள் உலகளாவிய ஒப்பந்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஓமன், ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட 28 நாடுகளுடனான தூதரக ஒருங்கிணைப்பு மூலம் இந்த உர விநியோகச் சங்கிலி தடையின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

உரத் துறையானது மாநில அரசுகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்து, இந்தியாவின் விவசாயத் தேவைகளைத் தடையின்றிப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276792&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2276792

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2276871) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Malayalam