சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவை உலக அளவில் போட்டித்திறன் நிறைந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

प्रविष्टि तिथि: 22 JUN 2026 6:55PM by PIB Chennai

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைப் பிரதிநிதிகளுடன் எளிதாக வர்த்தகம் மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று புதுதில்லியில் சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் சுற்றுலாத் துறைச் சூழலியலின்  முழுமையான வளர்ச்சித் திறனை வெளிக்கொணரத் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க முன்னணித் துறைசார் அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. நாடு முழுவதும் உள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்த வணிகங்களுக்குச் சாதகமான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கில், முக்கியப் பிரச்சினைகளையும், பரிந்துரைகளையும் முன்வைப்பதற்கான ஒரு தளத்தை இந்தக் கூட்டம் வழங்கியது.

 

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், சீர்திருத்தங்களுக்கும் இந்தியாவை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். ஒழுங்குமுறைத் தடைகளைக் கண்டறிவதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் நிலையான துறைசார் வளர்ச்சியை எளிதாக்குவதற்கும், தொழில்துறை சார்ந்தவர்களுடன் தொடர்ச்சியான செயல்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 

 ஹோட்டல் வகைப்பாடு முறையை எளிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு புவனேஷ் குமார் வலியுறுத்தினார். இதற்காக, ஆய்வு  அடிப்படையிலான மதிப்பீட்டிலிருந்து சுய-அறிவிப்பு அடிப்படையிலான மதிப்பீட்டிற்கு மாறுதல், சரிபார்ப்புப் பட்டியல் அம்சங்களையும்  கட்டாயச் சான்றிதழ் தேவைகளையும் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். துறைசார்ந்த பிரதிநிதிகள் மத்தியில் இந்த முன்மொழிவுகளுக்கு வரவேற்பு எழுந்தன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276789&reg=3&lang=1

(Release ID: 2276789)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2276869) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi