சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
5 லட்சம் உறுப்பு தான பதிவுகள் என்ற முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
22 JUN 2026 7:32PM by PIB Chennai
நாட்டின் உறுப்பு தான இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பு தான பதிவுகளை எட்டியுள்ளது. உறுப்பு மற்றும் திசு தானம் எனும் உயிர்காக்கும் செயலில் குடிமக்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வு, கருணை மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், வாழ்வதற்கு மறுவாய்ப்பையும் அளிக்கும் ஒரு உன்னதமான மனிதாபிமானச் செயலாக உறுப்பு தானம் குறித்த பொதுமக்களிடையேயான வரவேற்பு அதிகரித்து வருவதை இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், தன்னார்வ உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிப்பதிலும், தகவலறிந்த பங்கேற்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் இந்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இந்த நிகழ்வில், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (NOTTO) இயக்குனர் டாக்டர் அனில் குமார், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் முக்கிய பங்காற்றிய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், கல்வி நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டாளிகளின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரித்துப் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276810®=3&lang=1
(Release ID: 2276810)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2276846)
आगंतुक पटल : 9