சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதித்துறையில் திஷா 2.0 திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் ஒப்புதல் அளித்துள்ளார்
प्रविष्टि तिथि:
22 JUN 2026 1:44PM by PIB Chennai
நீதி கிடைப்பதற்கு ஒட்டுமொத்த அணுகலுக்கான புத்தாக்கத் தீர்வு வடிவமைப்பு (திஷா) 2.0-வை 2026 ஏப்ரல் 1 முதல் 2031 மார்ச் 31 வரை 5 ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.255 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவு பெற்றது. மத்திய திட்டமான திஷா 2.0 என்பது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் நீதித்துறைச் செயலாளர் திரு நீரஜ் வர்மா தலைமையில் நடைபெற்ற நீதித்துறை நிலைக்குழுவில் விவரிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டதாகும்.
அரசியல் சட்டத்தின் முகப்புரை, சட்டப்பிரிவுகள் 14, 21, 39-ஏ ஆகியவற்றின்படி, இந்திய மக்களுக்கு எளிதாக நீதி கிடைப்பதை நிறைவேற்றுவதும், அமைதி, நீதி, வலுவான அமைப்புகளுக்கான ஐநா நீடிக்கத்தக்க வளர்ச்சி இலக்கை அமல்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பதும் திஷா 2.0-ன் நோக்கமாகும்.
முன்னேற விரும்பும் 112 மாவட்டங்கள், முன்னேற விரும்பும் 500 ஒன்றியங்கள் உட்பட 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 784 மாவட்டங்களை உள்ளடக்கிய கிராம பஞ்சாயத்துகளில் செயல்படும் 2,50,000 பொதுச் சேவை மையங்கள் மூலம் அனைவருக்கும் வழக்குக்கு முன் தொலைநிலை சட்ட ஆலோசனைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
நியாய பந்து திட்டம், சட்ட அறிவு, சட்ட விழிப்புணர்வுத் திட்டம், இணக்கமான சட்ட முயற்சிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட சஞ்சீவனி ஆகியவற்றை செயல்படுத்துவதும் திஷா 2.0-ன் நோக்கமாகும்.
ஏற்கனவே, திஷா திட்டம் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடுடன் 2021 முதல் 2026 வரை அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2026 மே 31 நிலவரப்படி மொத்தம் 2.37 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276525®=3&lang=1
***
SS/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2276819)
आगंतुक पटल : 7