ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிழக்கு கடலோர ரயில்வேயின் 631 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.270 கோடி மதிப்பில் கவாச் தொழில்நுட்பத்தை அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 22 JUN 2026 3:03PM by PIB Chennai

உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் ரயில்வே பாதுகாப்பை வலுப்படுத்தும் பெரும் நடவடிக்கையாக, கிழக்கு கடலோர ரயில்வேயின் 631 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.270 கோடி செலவில் கவாச் தொழில்நுட்பத்தை அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம் கிழக்கு கடலோர ரயில்வேயின் 6 முக்கிய ரயில்வே பிரிவுகளான பகுவாபால் – புத்தபாங்க், ஹரிதாஸ்பூர் – பாராதீப், குர்தா சாலை – பாலங்கீர், நவ்பாடா -  குனுபூர், லஞ்சிகர் சாலை -  ஜூனாகர், பாப்ளி -  சாலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இது ரயில்வே கட்டமைப்பு முழுவதும் எல்டிஇ அடிப்படையிலான தகவல் தொடர்புடன் கவாச் அமைப்பை நிறுவுவதற்கான இந்திய ரயில்வேயின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். கவாச் என்பது இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு  அமைப்பாகும். இது அபாய சிக்னலைக் கடந்து செல்வதுஅதிவேகம்ரயில் மோதல்களைத் தடுப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புரயில் இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்துதேவைப்படும்போது தாமாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் செயல்பாட்டுப் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.

இத்திட்டம் கிழக்கு கடலோர ரயில்வே சேவையாற்றும் ஓடிசாவின் முக்கியப் பகுதிகள், அருகே அமைந்துள்ள பிராந்தியங்களில் பயணிகள், சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276561&reg=3&lang=1

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2276746) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada