இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேரளத்தில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ள விளையாட்டுகள், உடற்தகுதி முன்முயற்சி நிகழ்ச்சிகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்
प्रविष्टि तिथि:
22 JUN 2026 12:51PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஜூன் 23 அன்று கேரளம் செல்கிறார். அங்கு அவர் உடல்தகுதி, விளையாட்டுத் திறன், விளையாட்டுகளில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலான தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
முதல் நிகழ்ச்சியாக திருவனந்தபுரத்தில் சக்காய் ஐடிஐ-யில் இருந்து ஷங்குமுகம் கடற்கரை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கடலோரம் சைக்கிள் ஓட்டுதல் என்ற நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஃபிட் இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, சைக்கிள் ஓட்டுதல், இதர உடற்தகுதி சார்ந்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இப்பயணத்தின்போது, இந்திய விளையாட்டுத் துறைக்கு எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய நாட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான மைலோமில் உள்ள ஜிவி ராஜா விளையாடுப் பள்ளியையும் டாக்டர் மாண்டவியா பார்வையிடுகிறார். அடிப்படை நிலையில், விளையாட்டு மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும், இளம் விளையாட்டு வீரர்களின் திறன்களை ஊக்குவிப்பதிலும், அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கையை இப்பயணம் பிரதிபலிக்கிறது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276499®=3&lang=1
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2276707)
आगंतुक पटल : 5