19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா நிறைவு நாள்: சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற திரைத்துறை பிரபலங்கள்
மும்பையில் நடைபெற்ற 19-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில் சிவப்பு கம்பள வரவேற்புடன் திரைத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும், ஆளுமைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிர அரசின் மராத்தி மொழி, கலாச்சார விவகாரங்கள் துறைச் செயலாளர் திரு கிரண் குல்கர்னி, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு பிரகாஷ் மக்தூம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், நடிகை ஐமி பருவா, நடிகை ஷீனா சோஹன், டாக்டர் கிரண் சாந்தாராம், பிரபல அனிமேஷன் இயக்குநர் ரைமண்ட் க்ரம்மே உள்ளிட்ட பலரும் இந்தச் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். ஒரு வார காலமாக நடைபெற்ற இந்தத் திரைப்படக் கொண்டாட்டத்தின் இறுதி நாளில், கலை உலகினரின் புன்னகையும் பெருமிதமும் நிறைந்த தருணங்கள் அரங்கை அலங்கரித்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276317®=3&lang=1
***
SS/PD
रिलीज़ आईडी:
2276699
| Visitor Counter:
5