ரெயில்வே அமைச்சகம்
ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கூடுதல் ரயில் நிறுத்தங்களுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
22 JUN 2026 1:06PM by PIB Chennai
ரயில் சேவை எளிதில் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு பயணிகளை மையப்படுத்திய மும்முயற்சியாக ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நான்கு ரயில்களுக்கான கூடுதல் நிறுத்தங்களுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், உள்ளூர் பயணிகள், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பிற ரயில் பயன்பாட்டாளர்கள் பயனடைவர்.
ஹரியானாவில் தில்லி – சத்ரோட் பயணிகள் ரயில், பட்டுவாஸ் மெஹரானா நிலையத்திலும், அகர்தலா – பெரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பிக்கானீர் – ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஹன்சீ நிலையத்திலும் நின்று செல்லும்.
ராஜஸ்தானில் ஜெய்பூர் – ஆசர்வா எக்ஸ்பிரஸ் ரயில் பிஜய் நகர் நிலையத்தில் நின்று செல்லும்.
செயல்பாட்டு மதிப்பீடு, பயணிகளின் தேவை ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த நிறுத்தங்கள் லாபகரமானதாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நிறுத்தங்கள் காரணமாக சம்பந்தப்பட்ட ரயில் வண்டிகளில் பயணம் செய்ய இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொலைதூரம் பயணம் செய்வது தவிர்க்கப்படும். வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கான போக்குவரத்து இணைப்பு விரிவாக்கப்பட்டு பயண வசதி மேம்படுத்தப்படும்.
சிறந்த முறையில் ரயில் போக்குவரத்துக்கான அணுகல், பயணிகளுக்கு உகந்த சேவை திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதில் இந்திய ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்பதை புதிய ரயில் நிறுத்த ஒப்புதல்கள் பிரதிபலிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276505®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2276658)
आगंतुक पटल : 7