MIFF banner

மும்பை திரைப்பட விழாவில் இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோவை கௌரவிக்கும் நிகழ்வு

டேவிட் அட்டன்பரோவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், டங்கன் சார்ட் இயக்கி, அட்டன்பரோவால் ஊக்குவிக்கப்பட்ட 'சீக்ரெட்ஸ் ஆஃப் வைல்ட் இந்தியா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது. புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரான  அட்டன்பரோவால் உருவாக்கப்பட்டு, பெரிதும் பாராட்டப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணப்படமாகும். இது, செழிப்பான காடுகள், வானுயர்ந்த மலைகள், வறண்ட பாலைவனங்கள் ஆகிய மூன்று தீவிரமான சூழல் மண்டலங்களில் இந்தியாவின் மகத்தான பல்லுயிர்ப் பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

 

மூன்று பாகங்களில், 'பாலைவனச் சிங்கங்கள்' அத்தியாயம் வடமேற்கு இந்தியாவின் கடுமையான பாலைவனத்தில் கவனம் செலுத்துகிறது. அங்கு வலுவான உயிரினங்கள் மட்டுமே தங்களைத் தகவமைத்து உயிர்வாழ்கின்றன. இந்த ஆவணப்படம் அதன் சிறந்த ஒளிப்பதிவிற்காகத் தனித்து நிற்கிறது. அதன் காட்சிகளில் இந்தியக் கொடியின் குறியீட்டு மூவர்ணப் பிரதிநிதித்துவம் பின்னப்பட்டுள்ளது. இதன் உத்தி, கதை சொல்வது போல விரிகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக அமைகிறது. இதில் அட்டன்பரோ, தனது சொந்த வார்த்தைகளில், பாலைவனத்தை விவரிக்கிறார். முழுவதும் விளக்கங்கள் பெரிய, தெளிவான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எழுத்துக்களில் வழங்கப்பட்டுள்ளன.

 

அட்டன்பரோவின் கூர்மையான நோக்கமும், விலங்குகள் குறித்த ஆழ்ந்த அறிவும் இந்த ஆவணப்படத்தை உண்மையிலேயே ரசிக்கத்தக்கதாக ஆக்குகிறது. மனித மையவாதம் அதிகரித்து வரும் இக்காலத்தில், நாம் மற்ற உயிரினங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஆழ்ந்த பயணமாக இது அமைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275655&reg=3&lang=1

 

Release ID: 2275655

****

TV/PLM/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2275760   |   Visitor Counter: 6