நட்பின் சக்தியைக் கொண்டாடும் சுவிஸ் ஆவணப்படம் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
மோரிஸ் ஃபிரைபர்காஸ் இயக்கி, லியோன் ஷ்விட்டர், ஃபேபியானா சீட்ஸ் ஆகியோர் தயாரித்த சுவிஸ் ஆவணப்படமான “ஐ லவ் யூ, ஐ லீவ் யூ” படத்தின் சார்பில் செய்தியாளர் 19வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்றது. அத்துடன் நட்பு, மனநலம், மனித திறன் ஆகியவை குறித்த சிந்தனையைத் தூண்டும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சூரிச் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான கோல்டன் ஐ விருதையும் பார்வையாளர் விருதையும் வென்ற இந்த பன்மொழி ஆவணப்படம், மும்பை திரைப்பட விழாவில் சர்வதேச திரையிடலில் பிரிவில் திரையிடப்பட்டது. இது பார்வையாளர்கள், ஊடகப் பிரதிநிதிகளிடமிருந்து ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றது.
அடையாளத்தையும், தனக்கான ஓர் இடத்தையும் தேடி, தன் தந்தையின் தாய்நாடான அங்கோலாவிற்குப் பயணம் செய்யும் இசைக்கலைஞர் டீனோவை இந்த ஆவணப்படம் பின்தொடர்கிறது. டீனோ ஒரு கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகும்போது, இந்தப் பயணம் எதிர்பாராத திருப்பத்தைத் தருகிறது. இது, நட்பு, கவனிப்பு, மீட்சி ஆகியவற்றைப் பற்றிய ஒரு நெகிழ்வான ஆய்வாக இப்படத்தை மாற்றுகிறது.
திரைப்படத்தின் தலைப்பைப் பற்றிப் பேசிய மோரிஸ், “ஐ லவ் யூ, ஐ லீவ் யூ” என்பது காதலின் முடிவைக் குறிக்கவில்லை என்றும், மாறாக, அன்பு, நட்பின் பிணைப்பு தொடர்ந்தாலும் மக்கள் பிரிந்து செல்ல நேரிடலாம் என்ற கருத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். மனநலச் சவால்கள் குறித்த கதையைச் சொல்லவும், அதுபற்றி ஒரு பரந்த புரிதலை உருவாக்கவும் இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த ஆவணப்படம், மனநலம் குறித்த பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கடினமான காலங்களில் நட்பு, மனிதப் பிணைப்பு ஆகியவற்றின் வலிமையை பார்வையாளர்களுக்கு நினைவூட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275652®=3&lang=1
Release ID: 2275652
****
TV/PLM/SH
रिलीज़ आईडी:
2275752
| Visitor Counter:
12