MIFF banner

ஜெர்மனி திரைப்படப் பள்ளியைச் சேர்ந்த விருதுபெற்ற 10 திரைப்படங்கள் இளைஞர்களுக்கு உலக சினிமாவிற்கான தளத்தை வழங்குகின்றன

மும்பையில் நடைபெற்று வரும் மும்பை சர்வதேச திரைப்படவிழாவின் ஒரு பகுதியாக உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்படப் பள்ளிகளில் ஒன்றான ஜெர்மனி திரைப்படப் பள்ளி சார்பாக 10 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் சிறப்புப் பிரிவில் வளர்ந்து வரும் இளைஞர்களின் வாய்ப்புகளுக்கான திரைப்படங்கள் பிரிவில் விருது பெற்ற அனிமேஷன் சிறுகதை ஆவணப்படமென 10 திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட கதைகளை அறிமுகப்படுத்துவதாக அமைந்தது. இந்தப் புதிய தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களின் படைப்பாற்றல், கலை உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.

துன்பமான தருணங்கள், குடும்ப உறவுகள் குறித்த மனதைத் தொடும் கதைகள் முதல், நினைவுகள், முதுமை, சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த கண்கவர் அனிமேஷன் படைப்புகள் வரை சமகாலத் திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் தளமாக இது அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275152&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2275397   |   Visitor Counter: 7