பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்ட திரு ஹரிவன்ஷுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 APR 2026 2:20PM by PIB Chennai

குடியரசுத்தலைவரால் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்ட திரு ஹரிவன்ஷுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரு ஹரிவன்ஷ், பத்திரிகைத் துறைக்கும் பொது வாழ்விற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி, தன்னை ஒரு மரியாதைக்குரிய அறிஞராகவும், சிந்தனையாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாக அவரது ஆழ்ந்த சிந்தனைகளும் நுண்ணறிவுகளும் சபையின் நடவடிக்கைகளை கணிசமாக வளப்படுத்தியுள்ளன என்று திரு மோடி தெரிவித்தார். இந்த நியமனம் குறித்து தனது மனமார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், திரு ஹரிவன்ஷின் தொடர்ச்சியான பங்கேற்பு நாடாளுமன்ற விவாதங்களுக்கு மேலும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250730&reg=3&lang=1

----

(Release ID: 2250730)

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2275159) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam