குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

போதைப் பொருள் இல்லாத வளாகம் இயக்கத்தின் கீழ் தில்லி பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை குடியரசு துணைத்தலைவர் பாராட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 2:05PM by PIB Chennai

போதைப் பொருள் இல்லாத வளாகம் இயக்கத்தின் கீழ் தில்லி பல்கலைக்கழகத்தின் சிறப்பான முயற்சிகளை குடியரசு துணைத்தலைவரும் தில்லி பல்கலைக்கழக வேந்தருமான திரு சி  பி ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், நடப்பாண்டு தொடக்கத்தில் இப்பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் இல்லாத வளாக இயக்கம், மின்னணு உறுதிமொழி தளம் ஆகியவை தொடங்கப்பட்டது குறித்து நினைவுகூர்ந்து போதைப் பொருள் இல்லா இந்தியாவின் தூதர்களாக விளங்குமாறும் போதைப் பொருள் உபயோகத்திற்கு எதிராக போராடுமாறும் மாணவர்களை வலியுறுத்தினார்.

இந்த இயக்கத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதில் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை பாராட்டுவதாக கூறிய குடியரசு துணைத்தலைவர், இக்கூட்டு முயற்சி மூலம் 53,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.  இந்த முன்முயற்சிகள் ஆரோக்கியமான, வலிமையான மேலும் வளமிக்க நாட்டை கட்டமைப்பதற்கான சிறப்பான பங்களிப்பு என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் இதில் இணைந்து இயக்கத்தில் தீவிரமாக செயல்பட மாணவர்களை ஊக்குவிக்குமாறு அழைப்பு விடுத்தார். இளைஞர்களிடையே கூட்டு நடவடிக்கை, நீடித்த விழிப்புணர்வு ஆகியவை போதைப்பொருள் இல்லா இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2274528)

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2274835) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam